ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நால்வர் மீதும் பெங்களூருவில் நடந்து வந்த சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவிருக்கிறது.
பதட்டம்:
இதனால், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் சசிகலாவை, உடனடியாக முதல்வர் ஆக்குவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சசிகலா பதட்டத்தில் இருப்பதாகவும் போயஸ் தோட்டத்து வட்டாரங்கள் கூறுகின்றன.
அவ்வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: முதல்வர் பதவி மீது சசிகலாவுக்கு ஒரு கண் இருக்கிறது. இதற்காக, பன்னீர்செல்வத்தை பதவி இறங்குமாறு, அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயக்குமார், தம்பிதுரை மூலம் நெருக்கடி கொடுத்தார்.
ஆனால், அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கிற ஆள் நான் இல்லை என்பது போல, பன்னீர்செல்வம், தன்னிச்சையாக முதல்வர் பதவியில் தொடர்கிறார்; வேகமாக செயல்படுகிறார்.
இந்நிலையில், சசிகலா, இளவரசி உள்ளிட்டவர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பு,விரைவில் வெளியாகப் போகும் தகவல் வந்து, சசிகலாவை டென்ஷன் ஆக்கி உள்ளது. குதூகலமாக இருந்த போயஸ் தோட்டம், சில நாட்களாக அமைதியாகி உள்ளது. தீர்ப்பு சாதகமாக வரவில்லை என்றால், தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதனால், கனவுகள் அனைத்தும் தவிடு பொடியாகும் என்று, சசிகலா தரப்பினர் பதட்டத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து பதவி இறங்கச் சொல்வது உள்ளிட்ட பலவேறு பணிகளையும், தற்காலிகமாக நிறுத்தி வைக்க, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருக்கு சசிகலா உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல், தீர்ப்பால் முதல்வர் கனவு கலைந்தால், டி.டி.வி.தினகரனிடம் அனைத்து அதிகாரங்களையும் தரலாம் என சசிகலா எண்ணியுள்ளார். இப்போதே போயஸ் கார்டனில் அனைத்து அதிகாரங்களுடன் தினகரன் வலம் வருகிறார். கட்சியை வழி நடத்தும் பொறுப்பையும் தினகரனிடமே தரலாம் எனவும் சசிகலா எண்ணுகிறார். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.
English summary:
Jayalalithaa, Sasikala, princess, Suthaharan assets, including the four who walks in Bangalore and in the case of appeals, the Supreme Court judgment as soon as it is delivered.