சென்னை : தமிழகத்தில் அமைதி காக்க வேண்டியது அனைவரின் கடமை என நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள கருத்து, யார் ஒருவர் கண்ணியம் தவறினாலும் அது சங்கமித்திருக்கும் அனைவரையும் பாதிக்கும். வாழ்த்துக்கள் விமர்சனமாகாதிருக்க விரசக் கேலிகளை தவிர்க்கவும். அலங்காரநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை தமிழக அறபோராட்டச் சரித்திரத்தில் பெரிய ரத்தக்கறை. வன்முறை பயன்தராது. இதுவரை காத்த அறத்தை கைவிடாதீர். வன்முறை செய்வது மாணவர்களாக இருக்கக் கூடாது. மக்களாக இருக்கக் கூடாது.
இதுவரை பொதுச்சொத்திற்க்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம் அமைதி இழக்கக்கூடாது. இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும்.செய்யும். வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை. அறவழிப் போராளிகள் ரத்தக் காயம் படுவது இதுவரை நிகழாததல்ல. அமைதி காக்கும் கடமையே விவேகம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
English summary:
Tamil Nadu was the duty of everyone to defend peace, Kamal Haasan has asked on Twitter.