புதுடெல்லி: மெரினா கடற்கரையை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மறுத்து வருவதால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு என போலீசார் இன்று எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில் மெரினாவில் உள்ள ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னைவாசிகளும் இன்று போராட்டக் களத்தில் குதித்தனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த கிரிக்கெட் வீரர் சேவாக் தமிழ்நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து சேவாக் கூறும்போது '' தமிழ்நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தங்களது அறவழிப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தை வைத்து மற்றவர்கள் ஆதாயம் தேட முயற்சிக்க வேண்டாம்'' என்று கூறியிருக்கிறார்.
English summary:
New Delhi: Marina leave the beach to disperse them, the police will not forcibly jallikattu supporters have been refused.