சென்னை : ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள், ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்புக்கு பாடை கட்டி ஊர்வலம் நடத்தினர்.
எழுச்சி:
சுப்ரீம் கோர்ட் தடையால், தமிழகத்தில், இந்த ஆண்டும், பொங்கலுக்கு, ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை. 'தடையை நீக்கி, இந்த ஆண்டே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்' என, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என, பல தரப்பினரும் போராடி வருகின்றனர். மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரண்ட பெண்களும், இளைஞர்களும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பீட்டாவுக்கு பாடை:
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்து, ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான ‛பீட்டா' அமைப்புக்கு சென்னை- மெரினா, மற்றும் நெல்லை பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் பாடை கட்டி ஊர்வலம் நடத்தினர். ‛பீட்டா' அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் முழக்கமிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary:
Chennai : Jallikattu staged in support of the youth, which led to the ban jallikattu beta system hearse procession staged tumor.