புதுடில்லி : இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என அமேசான் நிறுவனத்திற்கு அமெரிக்காவில் உள்ள தூதரகம் மூலம் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், இந்திய தேசியகொடி மாதிரியான மிதியடிகளை விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகைப்படங்களைப் பொதுமக்கள், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த சுஷ்மா, ''அமேசான் நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோர வேண்டும். இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் அனைத்துப் பொருட்களையும் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் அமேசான் அதிகாரிகளுக்கு இந்திய விசா அளிக்கப்பட மாட்டாது. ஏற்கெனவே அளிக்கப்பட்டிருக்கும் விசாக்களும் ரத்து செய்யப்படும்'' என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, மன்னிப்பு கோரியதோடு அமேசான் நிறுவனம் மூவர்ணம் கொண்ட மிதியடிகளையும் திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இந்த சர்ச்சை ஓய்வதற்குள் தற்போது அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க இணையதளத்தில் மகாத்மா காந்தியின் உருவம் அச்சிடப்பட்ட காலணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட சம்பவம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இந்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளியுங்கள் என்று அமேசான் நிறுவனத்திற்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அமேசான் நிறுவனத்திடம் வலியுறுத்துமாறு வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
English summary:
NEW DELHI: Indians of the Amazon to the sentiments of the value of the Nuggets organization is urging the federal government, through its embassy in the United States.