மதுரை: ஜல்லிக்கட்டு நடத்த கோரி, மதுரை தமுக்கம் மைதானத்தில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இன்று மாலை போராட்டம் வாபஸ் பெற்றனர். ஒரு குழுவினர் வாபஸ் இல்லை என்று அறிவித்துள்ளனர். போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை மெரினா, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கோவை வ.உ.சி., மைதானம், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடந்து வந்தது. சென்னை மெரினாவில் இன்று காலை முதல், போராட்டக்காரர்களை அகற்ற போலீசார் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். பிற இடங்களில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளன. பல இடங்களில் போராட்டக்காரர்களை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றனர்.
மதுரை தமக்கம் மைதானத்தில் பேராட்டக்காரர்களுடன் போலீசாரும், அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர். இன்று மாலை அவர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். ஏராளமானோர் அங்கிருந்து கலைந்து செல்ல தொடங்கினர். சிலர் தொடர்ந்து அங்கு கலையாமல் உள்ளனர்.
English summary:
Madurai: jallikattu demand to hold camp in Madurai tamukkam stadium staged a protest today withdrew the students and youth. There is a group that announced the withdrawal. Following the talks held by the police.