சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது போலீசார் திடீர் தடியடி நடத்தினர்.
முதல்வரின் கோரிக்கையை ஏற்க மறுப்பு:
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் சென்னை மெரினா கடற்கரையில் 2 நாட்களாக இரவு பகல் பாராது இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று இரவு இரண்டு அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.எனினும் போராட்டம் இன்றும் தொடர்கிறது. முதல்வர் பன்னீர் செல்வம் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என கோரி அறிக்கை வெளியிட்டும் அதை ஏற்க மறுத்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்தும் வரை போராட்டத்தை
தொடர்வோம் என கூறினார்கள்.
லோசன தடியடி:
அமைதியாக அறவழியில் சென்று கொண்டிருந்த போராட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு போலீசார் அதிகளவு குவிக்கப்பட்டனர். சாலையில் கூடியிருந்தவர்கள் மீது லத்தியால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில், காவலர் மற்றும் போராட்டக்காரர்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசியதால் தடியடி நடத்தப்பட்டதாகவும், வேடிக்கை பார்க்க வந்தவர்களை அப்புறப்படுத்தும் போது லேசான தடியடி நடத்தியதாகவும் போலீசார் கூறுகின்றனர். ஆனால், போராட்டக் குழுவினர் அதை மறுக்கின்றனர். இதனால்,மெரினாவில் பதற்றம் நிலவுகிறது.
இருப்பினும், அமைதியான முறையில் போராட்டத்தை தொடருமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
English summary:
Chennai: Marina Beach in favor Jallikattu sudden police batons on the fighting.