சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் நடத்தப்பட்டு வரும் போராட்டத்தில் பங்கேற்கவும், ஆதரவு தெரிவிக்கவும் வரும்அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு காணப்படுகிறது.
அரசியல்வாதிகளுக்கு ‛ஆப்பு':
சென்னை மெரினா கடற்கரையில் போராட்ட
க்காரர்களை சந்திக்க முயற்சி செய்த தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் திரும்ப அனுப்பப்பட்டார். அதே போல், திருச்சியில் போராட்டக்காரர்களை சந்திக்க வந்த தி.மு.க., மூத்த தலைவர் கே.என்.நேருவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அலங்காநல்லுாரில் போராட்டக்காரர்களை சந்திக்க வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாைரும் திருப்பி அனுப்பப்பட்டார்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க வந்த தி.மு.க.,வின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான சுகவனம் மீது தண்ணீர் பாக்கெட் மற்றும் பிஸ்கெட் பாக்கெட் வீசி விரட்டி அடித்தனர்.
மதுரையில் தமுக்கம் மைதானத்தில் போராட்டக்காரர்களை சந்திக்க வந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது செருப்பு மற்றும் தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. நாமக்கல்லில் தி.மு.க., மாவட்ட பொறுப்பாளர் இளங்கோவனுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
English Summary:
Chennai: Tamil Nadu Jallikattu demand to hold the fight being waged by the students and young people participate in a protest in Support coming from politicians showed wedge on them