சென்னை: ‛‛பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை இல்லை என்பது, 2008 முதல் நடைமுறையில் உள்ளது. இதற்கு அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்., மற்றும் தி.மு.க., தான் காரணம்,'' என, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னையில், பொன் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுமுறை இல்லை என்பது ஊழியர் நலக்குழு எடுத்த முடிவு. கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் பண்டிகையை நீக்கி, 2008 ல் முதலில் அறிவிப்பு வெளியானது. அப்போது மத்தியில் காங்., மற்றும் தி.மு.க., தான் ஆட்சியில் இருந்தன.அப்போது இப்பிரச்னை குறித்து யாரும் குரல் எழுப்பவில்லை.இந்த விஷயத்தில் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தது தி.மு.க., தான்.
பொய் தகவல்கள்:
இதேபோன்று, 2012ல் பொங்கலுக்கு கட்டாய விடுமுறை இல்லை என்ற சூழல் உருவானது. அப்போதும் மத்தியில் ஆட்சியில் இருந்ததது காங்., மற்றும் தி.மு.க., தான். அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., கூட, இது குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் பா.ஜ., வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அதை தடுக்க பார்க்கவே, இது போன்று பொய் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

English Summary:
Chennai: '' Pongal festival holiday is not mandatory, has been practiced since 2008. The Congress was in power in the middle., And the DMK, just because ', Union Minister Pon Radhakrishnan said co.