புதுடில்லி : பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு உள்ளிட்ட விவரங்களை வெளியிட முடியாது என மத்திய தகவல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மனு:
பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயண விவரங்களைக் கோரி முன்னாள் கடற்படை அதிகாரி லோகேஷ் பத்ரா என்பவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மோடியின் வெளிநாட்டு பயண செலவு விவரங்கள், விமான கட்டணம் செலுத்திய விவரங்கள் மற்றும் ரசீதுகளை தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் அலுவலகம் மறுப்பு:
இதற்கு பதிலளித்த பிரதமர் அலுவலகம், ‛பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயண விவரங்கள் ரகசியமானவை; பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவே, அவற்றை வெளியிட முடியாது' எனத் தெரிவித்தது. இதனை எதிர்த்து மத்திய தகவல் ஆணையத்தில் லோகேஷ் பத்ரா மேல் முறையீடு செய்தார்.
உத்தரவு:
இந்த மனுவை பரிசீலித்த மத்திய தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர், பிறப்பித்த உத்தரவு: பிரதமரின் விமானப் பயண நடைமுறைகள் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையால் திட்டமிடப்படுகின்றன. இதுதொடர்பான தகவல்களை வெளியிடத் தேவையில்லை என தகவலறியும் உரிமைச் சட்டம் 24வது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, மனுதாரர் கோரியுள்ள தகவல்களை வெளியிட முடியாது. இவ்வாறு அவர் தனது உத்தரவில் தெரிவித்தார்.
English summary:
New Delhi: Prime Minister Narendra Modi's foreign travel expenses, including the Federal Communications Commission has denied that it could not release details.