பிகார் மாநிலத்தில் முழு மது விலக்கை அமல்படுத்தியதற்காக, அந்த மாநிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில், முதல்வர் நிதீஷ் குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
சீக்கிய குரு கோவிந்த் சிங்கின் 350-ஆவது பிறந்த தின விழா, கடந்த மாதம் 25-ஆம் தேதி தொடங்கியது. விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி, பிகார் மாநிலம், பாட்னாவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பிகார் முதல்வர் நிதீஷ் குமார், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ராம்விலாஸ் பாஸ்வான், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், ஆளுநர் ராம்நாம் கோவிந்த் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர். நாடு முழுவதிலும் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் விழாவுக்கு வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் நிதீஷ் குமார் பேசுகையில், ""பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, அந்த மாநிலத்தில் பூரண மதுவிலக்கை வெற்றிகரமாக அமல்படுத்தினார்;
மதுவுக்கு எதிரான பிரசாரத்தின் தொடக்கப்புள்ளியாக அது இருந்தது. இதேபோல், நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
அவரைத் தொடர்ந்து மோடி பேசியதாவது:
பிகாரில் பூரண மது விலக்கை அமல்படுத்தியதற்காக மாநில முதல்வர் நிதீஷ் குமாரை மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். ஆனால், பூரண மதுவிலக்கு என்பது ஒரு கட்சியால் மட்டுமோ அல்லது நிதீஷ் குமாரால் மட்டுமோ வெற்றிபெற்று விடாது. முதல்வரின் நடவடிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும், மக்களும் முழு ஆதரவு அளித்து, அதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். மது விலக்கை வெற்றிகரமாக அமல்படுத்துவதன் மூலமாக, ஒட்டுமொத்த நாட்டுக்கே முன்னுதாரணமாக பிகார் மாநிலம் விளங்கும் என்றார் அவர்.
அரசியலில் இரு துருவங்களாக இருக்கும் பிரதமர் மோடியும், நிதீஷ் குமாரும் ஒருவரை ஒருவர், நிகழ்ச்சியில் பாராட்டிக்கொண்டது, அனைவரும் வியக்கும் வகையில் இருந்தது.
கடந்த 2014-ஆம் ஆண்டு, பிரதமர் பதவி வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியவர் நிதீஷ் குமார்.
அதைத் தொடர்ந்து, 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பாஜகவை தோற்கடிப்பற்காக, தனது அரசியல் எதிரியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து, தேர்தலை சந்தித்தார். அந்தத் தேர்தலின்போது, மோடியும், நிதீஷ் குமாரும் எதிரெதிராக அனல் பறக்கும் பிரசாரங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டபோது மத்திய அரசின் முடிவுக்கு நிதீஷ் குமார் ஆதரவு அளித்தார்.
English Summary : Prohibition went into effect: Modi congratulates Nitish.Amalpatuttiyatark full exemption for alcohol in Bihar, at a ceremony held on Thursday in the state, Chief Minister Nitish Kumar praised Narendra Modi.
Sikh Guru Gobind Singh's 350-th birthday celebrations started on the 25th of last month. Closing day of the festival program, Bihar, held in Patna on Thursday. On this occasion, the Prime Minister, Narendra Modi, Bihar Chief Minister Nitish Kumar, Rashtriya Janata Dal leader Lalu Prasad took part in the platform.