அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை மத்திய நிதிஅமைச்சர் அருன் ஜெட்லி நேற்ரு வெளியிட்டார்.
பஞ்சாப் தேர்தல்:
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 4-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனால், அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, பிராச்சாரம் ஆகிய பணிகளில் மும்முரமாக களமிறங்கி உள்ளன. தேசிய கட்சியான பா.ஜ.க., அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து இந்த தேர்தலை சந்திக்கிறது.
தேர்தல் அறிக்கை:
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜலந்தர் நகரில் உள்ள பஞ்சாப் மாநில பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டார். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பள்ளிக்கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை இலவசம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை போன்ற வாக்காளர்களை கவரும் வகையில் பல கவர்ச்சிகரமான திட்டங்கள் இந்த தேர்தல் அறிக்கையில் வெளியாகியுள்ளது.
கூட்டணி தொடரும்:
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய அருண் ஜெட்லி,” அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி தொடரும் நிலையில் வரும் தேர்தலில் மக்களால் இன்னொரு வாய்ப்பு அளிக்கப்பட்டால் பஞ்சாப் மாநிலம் மேலும் வளர்ச்சியடையும்” என தெரிவித்துள்ளார்.
English summary:
Amritsar, Punjab state assembly elections, BJP's election manifesto released by the Central finance minister arun Jaitley.