லக்னோ : உ.பி., சட்டசபை தேர்தலுக்காக காங்., துணைத்தலைவர் ராகுலும், உ.பி., முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேசும், நாளை ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர்.
ஒரே மேடையில் அகிலேஷ் -ராகுல் :
உ.பி., சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு பிப்ரவரி 11 ம் தேதி துவங்கி, 7 கட்டங்களாக நடக்க உள்ளது. உ.பி.,யில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி உருவாகி உள்ளதால், நாளை (ஜனவரி 29) நடக்கும் பிரசார கூட்டத்தில் முதல் முறையாக ராகுலும், அகிலேசும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர். மேலும் இருவரும் இணைந்து கொடியசைத்து, கூட்டணி பிரசாத்தை துவக்கி வைக்க உள்ளனர்.
அகிலேஷ் நம்பிக்கை :
காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை எதிர்கொள்வதால் நிச்சயம் தங்கள் கட்சி 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என அகிலேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராகுல், அகிலேஷ் பங்கேற்கும் இந்த பிரசார கூட்டத்தில் பிரியங்காவும், கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். அதே போல் சமாஜ்வாதி சார்பில் அகிலேஷின் மனைவி டிம்பிளும் இந்த கூட்டத்தில் பேச உள்ளார். உ.பி., தேர்தலில் இந்த பிரசார கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
English Summary:
Lucknow: Uttar Pradesh assembly election Cong., Vice President Rahul, UP Chief Minister and leader of the Samajwadi Party akhilesh, tomorrow are set to the same stage of the election campaign.