சென்னை: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதனால், ஜெ., மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும் என கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்படும் ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா. மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்தது. இதனால், அப்செட் ஆன, சசிகலா புஷ்பா, சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் கொஞ்சம் தீவிரத்தை குறைத்திருந்தார்.
மீண்டும் உற்சாகம்:
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியுலகிற்கு கொண்டு வர வேண்டும்; அதற்கு சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும் என்று கேட்டு, ஏற்கனவே மனு அளித்திருந்தார். அந்த மனுவை தற்போது பணியாளர் நலத்துறைக்கு அனுப்பி இருக்கும் அமைச்சர் ராஜ்நாத் சிங், இது தொடர்பான முதல்கட்ட விசாரணைய மேற்கொள்ளுமாறு, கடிதத்தை பரிந்துரைத்துள்ளார். முகாந்திரம் இருக்குமானால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடலாம் எனவும், ராஜ்நாத் சிங் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால், சோர்ந்திருந்த சசிகலா புஷ்பா, திடீர் உற்சாகம் ஆகி உள்ளார்.
சசிகலா அப்செட்:
இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: சமீபத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்க அதிமுக அலுவலகத்திற்கு சசிகலா வந்தார். அப்போது, அவரது உறவினர் ஒருவர், அவசர அவசரமாக சசிகலாவை நெருங்கி, சசிகலா புஷ்பாவின் மனு மீது, விசாரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டிருக்கும் தகவலை தெரிவித்தார்.
இதனால், சசிகலா அப்செட் ஆனார். அதிர்ச்சியில் இரண்டு நிமிடம் மட்டுமே, பேசி விட்டு, அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். சசிகலா நிறைய பேசுவார்; அவர் யோசனைகள் படி கட்சியை வளர்க்கலாம் என எதிர்பார்த்து வந்த முன்னாள் எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் அதிர்ச்சியடைந்தனர். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
English summary:
Chennai is the mystery of her death. So, J., In connection with the death of a CBI inquiry should be heard as the Supreme Court lawsuit, Digg, a Rajya Sabha member from Sasikala Pushpa allegedly deleted. Petition the court dropped the case. Thus, getting upset, Sasikala Pushpa, Shashikala and reduced the severity of some of the measures.