ரோஹ்டக்: அரியானாவில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் அவரை நோக்கி ஷூ வீசப்பட்டது.
ஆம் ஆத்மி கூட்டம்:
அரியானா மாநிலம் ரோஹ்டக் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் பிரசார கூட்டம் இன்று நடந்தது. அக்கூட்டத்தில் டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.
ஷூ வீச்சு:
அவர் பேசி கொண்டிருந்த போது, கூட்டத்திலிருந்த இளைஞர் ஒருவர் கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீசினார். அந்த ஷூ மேடைக்கு மிக அருகில் விழுந்தது. கெஜ்ரிவால் மீது படவில்லை. இதையடுத்து, அங்கிருந்த போலீசார் ஷூ வீசிய நபரை கைது செய்தனர்.
இச்சம்பவத்திற்கு கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடியின் கறுப்பு பண நடவடிக்கைக்கு எதிராக அவர் பேசியதால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
English summary:
Rohtak: Delhi Chief Minister Arvind Kejriwal, who participated in the campaign in Haryana in the crowd hurled a shoe towards him.