லக்னோ : உ.பி., சட்டசபை தேர்தலில் முதல்வரும், தனது மகனுமான அகிலேசை எதிர்த்து போட்டியிட தயாராக இருப்பதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
முலாயம் வேதனை :
சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு என்பது தொடர்பான விசாரணையில் இன்று மாநில தேர்தல் கமிஷன் தீரிப்பளிக்க உள்ளது. இந்நிலையில், லக்னோவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலத்தில் தனது ஆதரவாளர்களிடையே முலாயம் சிங் பேசினார்.
அப்போது அவர், ராம் கோபால் யாதவின் தாளத்துக்கு எல்லாம் அகிலேஷ் ஆடி வருகிறார். என்னை சந்திக்க வருமாறு மூன்று முறை அழைப்பு விடுத்தும், வீட்டுக்கு வந்த அகிலேஷ் ஒரே ஒரு நிமிடம் காத்திருந்துவிட்டு, வெளியேறி விட்டார்.
போட்டியிட தயார் :
சைக்கிள் சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் கமிஷன் என்ன தீர்ப்பு அளித்தாலும், என்னையும் தேர்தல் கமிஷன் அளிக்கும் சின்னத்தையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும். கட்சியையும், சைக்கிள் சின்னத்தையும் காப்பாற்ற என்னால் இயன்றதை எல்லாம் செய்து விட்டேன். ஆனால், எனது பேச்சுக்கு மதிப்பளிக்க அகிலேஷ் தவறிவிட்டால், அவருடன் மோதுவதை தவிர வேறு வழியில்லை. தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிடவும் நான் தயாராக உள்ளேன் என்றார்.
English Summary:
Lucknow: Uttar Pradesh Chief Minister in the Assembly elections, his son was ready to contest against akilecai Samajwadi Party chief Mulayam Singh publicly announced.