புதுடில்லி: வராக்கடனை வசூலிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு, மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வராக்கடன் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
வராக்கடன்களை வசூலிக்க என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். வராக்கடனை வசூலிக்க உள்ள சட்டங்கள் மூலம் பணம் வசூலிக்க தேவையான உள்கட்டமைப்பு உள்ளதா? கோடிக்கணக்கான ரூபாய் வராக்கடன்கள் உள்ளன.
இதனை வசூலிக்க முடியாததற்கு, சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப இல்லாததே காரணம். வராக்கடன் தொடர்பாக கடன் வசூலிக்கும் தீர்ப்பாயத்தில் உள்ள வழக்குகள் குறித்தும் மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
English summary:
NEW DELHI: Bank loans report to measures taken charge, the federal Supreme Court.