புதுடில்லி: 'கழிவுகளை சேகரிப்பது, தரம் பிரிப்பது, அவற்றை அகற்றுவது போன்றவற்றுக்கான, விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும் கட்டுமான திட்டங்களுக்கே அனுமதி அளிக்க வேண்டும்' என, அனைத்து மாநிலங்களுக்கும், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விரிவான அறிக்கை:
இது தொடர்பான வழக்கில், தேசிய பசுமை தீர்ப்பாயத் தலைவர், சுதந்திர குமார் தலைமையிலான அமர்வு அளித்துள்ள உத்தரவு: வீடு, அலுவலகம், தொழிற்சாலை உள்ளிட்ட எந்த கட்டுமான திட்டப் பணிகளாக இருந்தாலும், அதில், குப்பையும், கழிவு நீரும் சேரும். இந்த திட்டங்களில், குப்பை மற்றும் கழிவுகளை
சேகரிக்க, தரம் பிரிக்க மற்றும் அகற்றுவதற்கான விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.
உத்தரவு:
ஏற்கனவே உள்ள முனிசிபல் திடக்கழிவு மேலாண்மை சட்டங்களின்படி, இந்த திட்ட அறிக்கை இருந்தால் மட்டும், அவற்றுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அதேபோல், முறையான அனுமதியில்லாமல் துவங்கப்படும் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும். இதை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
English summary:
NEW DELHI: The 'waste collection, the quality of the separation, such as removing them, the construction plans should be allowed to submit a comprehensive report that, of all the states and ordered the National Green Tribunal.