புதுடில்லி: ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து பீட்டா தொடர்ந்த வழக்கில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அபிசேக் சிங்வி ஆஜரானார்.
வழக்கு:
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக பீட்டா அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அபிசேக் சிங்வி ஆஜரானார்.
எனது விருப்பம்:
இது தொடர்பாக சிங்வி கூறியதாவது: தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது பீட்டாவிற்காக நான் ஆஜராவது எனது தனிப்பட்ட விருப்பம். இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்புமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, பீட்டா அமைப்பு தாக்கல் செய்யவில்லை எனவும், அந்த அமைப்பிற்கு எழுந்துள்ள கடும் எதிர்ப்பு காரணமாக பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கியுப்பா என்ற அமைப்பு தான் தொடர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
English summary:
NEW DELHI: Tamil Nadu government to conduct jallikattu beta ensuing case brought against the law, senior Congress leader and former minister appeared before Abhishek Singhvi.