புதுடில்லி : டில்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் லஷ்கர் பயங்கரவாத அமைப்பினர் நாசவேலையில் ஈடுபடலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை:
குடியரசு தினக் கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் நோக்கில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பினர் தலைநகர் டில்லிக்குள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபடலாம் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து டில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீவிர கண்காணிப்பு:
மக்கள் கூடும் இடங்களான லாஜ்பத் நகர், மாளவியா நகர், நிஜாமுதீன் உள்ளிட்ட இடங்களிலும், பஸ் நிலையம், ரயில் நிலையம், சந்தைகள் உள்ளிட்ட இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதை முதல் செங்கோட்டை வரையிலான பாதைகளில் உள்ள அனைத்து பிரதான கதவுகளும் டில்லி காவல்துறையால் சீல் வைக்கப்பட்டுள்ளன.
விமானங்கள் பறக்க தடை:
குடியரசு தின கொண்டாட்டத்தையொட்டி விமானப் படை விமானங்கள் வான் சாகசத்தில் ஈடுபடும். இதற்காக இன்று(ஜன.,26) காலை 10.35 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிரங்கவும், புறப்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பிற விமானங்கள் இந்தியா கேட், ஜனாதிபதி மாளிகை வான் பகுதியில் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
English Summary:
India 's Republic Day celebrations in New Delhi, the Lashkar terrorist organization to carry out sabotage and intelligence alert has been following a strict security there.