புதுடில்லி: செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ள, 1,000 ரூபாய் நோட்டுகள், புதிய வடிவில் விரைவில் வெளியிடப்படும் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாபஸ் நடவடிக்கை:
இது குறித்து, மத்திய நிதியமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது: 'கறுப்புப் பணத்தைஒழிக்கவும், கள்ள நோட்டை தடுக்கவும், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, 2016 நவ., 8ல் அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டன.
சிக்கல்:
இருப்பினும், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பல சிக்கல்கள் உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. அதைத் தொடர்ந்து, 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து படிப்படியாக நீக்குவது குறித்து ஆராயப்படுகிறது. ஆனால், இது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
ரூ.1,000 நோட்டு?
இதற்கிடையில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய நிறம், வடிவமைப்புடன், 1,000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது, பார்வையற்றோரும் பயன்படுத்தும் வகையில் இருக்கும். தற்போது, இதற்கான பணி நடந்து வருகிறது.
ஆலோசனை:
மேலும், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களிலிருந்து பணம் எடுப்பதற்கான தற்போதைய கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கி கொள்வது குறித்தும் மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
English summary:
Today announced that invalidated 1,000 notes, the new format will be released soon, sources said.