புதுடில்லி: குறுகிய காலத்தில் ரூ.1,316 கோடி அளவுக்கு சொத்து சேர்த்தது தொடர்பாக, பகுஜன் சமாஜ் மாயாவதியின் சகோதரர் ஆனந்த்குமார், வருமான வரித்துறை கண்காணிப்பில் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும், உ.பி., முன்னாள் முதல்வராக இருந்தவர் மாயாவதி. இவரது சகோதரர் ஆனந்த் குமார். தொழிலதிபராக உள்ளார். ஆனால், இவரது பெயர் இந்திய தொழிலதிபர்கள் பட்டியலில் பிரபலமாகவில்லை. ஆனால், அவர் குறுகிய காலத்தில் ரூ.1,316 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாயாவதி முதல்வராக இருந்த கால கட்டம் உட்பட 2007 முதல் 2014 காலகட்டத்தில், ரூ.7.5 கோடியாக இருந்த இவரது சொத்து மதிப்பு, ரூ.1,316 கோடியாக உயர்ந்துள்ளது. இது குறித்தும், இவர் தொடர்பான சில நிறுவனங்கள் வாங்கிய பல கோடி கடன் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சந்தேகம்:
ஆனந்த் குமார், மிகப்பெரிய பங்குதாரராக உள்ள, டில்லியை சேர்ந்த ஆக்ரிதி ஓட்டல் நிறுவனங்கள் தொடர்பாகவும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 3 இயக்குநர்களை கொண்ட இந்த ஓட்டல் நிர்வாகத்தில், 37 பேர் பங்குதாரர்களாக உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான ஆவணங்கள் சட்டவிரோதமாக உள்ளதாக கூறப்படுகிறது. பங்குதாரர்களாக உள்ளவர்களின் நிறுவனங்கள் வெறும் காகித அளவில் தான் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில நிறுவனங்கள், இந்த ஓட்டல் நிர்வாகத்தில் முதலீடு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால், இந்த மூன்று நிறுவனங்களும் கோல்கட்டாவில் உள்ள ஒரே கட்டடத்தில் செயல்படுவதும், இதற்கு ஒரே இயக்குநர்கள் உள்ளதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இது போல் பல முறைகேடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
English summary:
NEW DELHI: In the short term assets amounted to Rs .1,316 crore, Bahujan Samaj Party of Mayawati's brother Ananth Kumar, the Income Tax Department has monitored and reported on.