அலங்காநல்லுார்:தடைகளை போட்டு உள்ளே நுழைய விடாமல் அலங்காநல்லுார் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் போராட்டக்குழுவினருடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் போராட்டக்குழுவினர் தங்களது முடிவை மாற்றவில்லை.
அலங்காநல்லுாரில் இன்று (22-01-17)ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் அலங்காநல்லுாரில் நுழையும் அனைத்துப்பகுதிகளிலுள் கட்டைகளை போட்டு தடை ஏற்படுத்தியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்காக அவரச சட்டம் என்பது ஏமாற்று வேலை, நிரந்தர சட்டம் கிடைக்கும் வரை எங்கள் போராட்டத்தை தொடர்வோம்' என கூறி அலங்காநல்லுாரில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
போராட்டக்குழுவினர் வசம் வாடிவாசல்:
ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசலில் மட்டும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு. மற்ற எந்தப்பகுதிகளிலும் பாதுகாப்பிற்கு போலீஸ் பாதுகாப்பு இல்லாதநிலையில். அலங்காநல்லுார் சர்க்கரை ஆலைக்கு வரும் வாகனங்களில் கட்டைகளை ஏற்றிவரப்பட்டு ஊருக்குள் நுழையும் அனைத்துப்பகுதிகளிலும் கட்டைகளால் தடுப்பு வேலி போடப்பட்டுள்ளன. இரு சக்கர வாகனங்கள் தவிர வேறு வாகனங்கள் உள்ளே நுழைய முடியாதபடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்து வந்த வாடிவாசல் பகுதி தற்போது போராட்டக்குழுவினர் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
இது குறித்து போராட்ட குழுவினர் கூறியதாவது: அவசர சட்டம் எங்களுக்கு தீர்வாகாது . ஏனேன்றால், பீட்டா மீண்டும் வழக்கு போட்டு தடை ஏற்படுத்தும் ஆகவே எங்களுக்கு எவ்வளவு கால தாமதம் ஆனாலும் நிரந்தர தீர்வு தான் வேண்டும் என்றனர்.
வாடிவாசல், கேட்கடையில் பொதுமக்கள் போராட்டம்:
அலங்காநல்லுாரில் தொடர்ந்து 6 நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. அலங்காநல்லுாரில் உள்ள கேட்கடை பகுதியிலும் வாடிவாசல் பகுதியிலும் இரு இடங்களில் போராட்ட குழுவினர் முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.
English Summary:
Alanganalluar: alanganalluar from entering the inside of the barriers have been agitating villagers. District Collector veeraghav, struggle people talks several times, but did not change their decision