லக்னோ: சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதலில் முலாயமுக்கும் அகிலேசுக்கும் இடையே சுமூக முடிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மோதல்:
விரைவில் நடைபெற உள்ள உ.பி., சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக சமாஜ்வாதி நிறுவன தலைவரும் முலாயம் சிங்கிற்கும், அவரது மகன் அகிலேசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அகிலேஷ் மற்றும் ராம்கோபால் யாதவ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு பின்னர் சேர்க்கப்பட்டனனர். தொடர்ந்து, அகிலேஷின் ஆதரவாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான, ராம்கோபால் யாதவ், தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டினார். அதில், கட்சியின் தேசிய தலைவர்பதவியிலிருந்து, முலாயம் நீக்கப்பட்டு, அகிலேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்; கட்சியின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து, சிவ்பால் யாதவ் நீக்கப்பட்டு, புதிய தலைவர் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து, முலாயம் டில்லி சென்று தேர்தல் ஆணையத்தை சந்தித்து கட்சி சின்னமான சைக்கிளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அகிலேசின் ஆதரவாளரான ராம்கோபால் யாதவ், டில்லியில் இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, பெரும்பாலான ஆதரவாளர்கள் தங்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும், சைக்கிள் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
சந்திப்பு:
இந்த சூழ்நிலையில், அகிலேஷ் இன்று திடீரென தனது தந்தையான முலாயமை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு கட்சியின் மூத்த தலைவரான அசம்கான் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து தனக்கு தெரியாது என சிவ்பால் தெரிவித்திருந்தார். தொடர்ந்து, அவரும் முலாயமை சந்தித்ததாக கூறப்படுகிறது.
தீர்வு?
முலாயம் - அகிலேஷ் இடையில் நடந்த 3 மணி நேர சந்திப்பின் போது சுமூக உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், தலைவர் பதவியை முலாயமிற்கு விட்டுத்தர ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, பதில் அமர் சிங்கிற்கு சமாஜ்வாதியின் சர்வதேச விவகாரங்கள் பதவியும், சிவ்பால் சிங்கிற்கு உ.பி.,யை தவிர்த்து தேசிய விவகாரங்கள் பதவியும் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. உ.பி., சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அகிலேசே முடிவு செய்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary:
Lucknow: Samajwadi Party Mulayam in the internal conflict and the results have been varied between akilec said.