சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கிய இன்னோவா காரை, அ.தி.மு.க.,விடம் திரும்ப ஒ
ப்படைத்து விட்டார் நாஞ்சில் சம்பத்.
ம.தி.மு.க.,வில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அக்கட்சியில் இருந்து விலகி, அ.தி.மு.க.,வில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார். அங்கு அவருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இத்துடன் கட்சி பணிகளை மேற்கொள்ள, இன்னோவா காரையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கி இருந்தார். இதன் பின், கடந்த ஆண்டு ஜன., 2ம் தேதி, கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில் இருந்து நாஞ்சில் சம்பத்தை, ஜெயலலிதா நீக்கினார்.
இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டு டிச.,5ம் இரவு, 11:30 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்தார். இதன் பிறகு கட்சி பணிகளில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகி இருந்தார். அவர் தி.மு.க.,வுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியானது. அவருக்கு ஜெ., வழங்கிய இன்னோவா கார் குறித்தும் சர்ச்சை பேச்சு எழுந்தது. இதையடுத்து, நாஞ்சில் சம்பத், இன்று(ஜன.,3) வெளியிட்ட அறிக்கை: கடந்த, 2012 டிச.,16ம் தேதி கட்சி பிரச்சாரத்திற்காக கட்சியின் பொருளாளர் பெயரில் வாங்கப்பட்ட கார் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஜெயலலிதா கார் சாவியை என்னிடம் ஒப்படைத்தார் அந்த காரை கட்சியின் பிரச்சாரத்தை தவிர என் சொந்த உபயோகத்திற்காக, ஒருநாள்கூட பயன்படுத்தவில்லை ,பிரச்சாரம் இல்லாத நாட்களில் என் நண்பர் ஜாபர் அலி வீட்டில் பாதுகாப்பாக நிற்கும். இப்போது, எட்டு மாத காலமாக பிரச்சாரம் இல்லை. வீணாக அதை வைத்து கொண்டு,‛இன்னோவா சம்பத்' என, பழியும் சுமந்து கொண்டு எதற்கு இருக்க வேண்டும் என்று எண்ணி இன்று காலை தலைமை கழகத்தில் ஒப்படைத்து விட்டேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary:
Chennai: Innova car of the late Chief Minister Jayalalithaa, AIADMK, was handed back to nanc Sampath.