இஸ்லாமாபாத் - தீவிரவாதத்துக்கு எதிராக போராடும் சவூதி தலைமையிலான பன்னாட்டு இஸ்லாமிய ராணுவத்தின் தலைவராக பாகிஸ்தான் முன்னாள் இராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
39 நாடுகள் கூட்டமைப்பு:
சவூதி அரேபியா தலைமையில் 39 நாடுகள் ஒன்றிணைந்து இஸ்லாமிய ராணுவ கூட்டமைப்பு என்ற தீவிரவாத தடுப்பு படையை அமைத்துள்ளது. துருக்கி, ஐக்கிய அமீரகம், பஹ்ரைன், வங்காள தேசம் உள்ளிட்ட பல இஸ்லாமிய நாடுகள் இக்கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளனர்.
தீவிரவாதிகளை வேட்டையாட:
ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் செயல்படும் தீவிரவாத குழுக்களின் தாக்குதல்களை தடுப்பதும், தீவிரவாதிகளை வேட்டையாடுவதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக, சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துகொண்டு அங்கு வெறியாட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டையாடுவது, இந்தப் படையின் தலையாய இலக்காகும்.
ஓய்வு பெற்ற தளபதி:
இந்தப் படையின் தலைவராக சமீபத்தில் ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி ரகீல் ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் காஜா ஆசிப் வெளியிட்டுள்ளார். சவுதி நாட்டின் தலைநகர் ரியாத்தில் உள்ள இந்த அமைப்பின் தலைமையகத்தில் ரகீல் ஷெரீப் விரைவில் பதவியேற்று கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English summary:
ISLAMABAD - Saudi-led fight against terrorism and transnational Islamic Army, was appointed as the head of Pakistan's former army chief rakil Sharif.