பெங்களூரு: பெங்களூருவில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொந்தரவு:
பெங்களூரு கம்மனஹள்ளி பகுதியில், ஜனவரி 1 ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு, அதிகாலை 2:30 மணியளவில், ஆட்டோவில் இளம்பெண் ஒருவர் வந்திறங்கினார்.
அப்போது பைக்கில் வந்த இருவர், அப்பெண்ணை வழிமறித்து, பாலியல் தொந்தரவு அளித்து, பைக்கில் ஏற்ற முயற்சி செய்தனர். ஆனால் அவர் ஏறாததால், கீழே தள்ளி விட்டு, ஓடிவிட்டனர். இந்த காட்சி, இப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியிருந்தது. சம்பவம் நடந்த மறுநாள் இரண்டாம் தேதியன்று இதை பார்த்த, வீட்டு உரிமையாளர் பிரசாந்த், உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார்.
கைது:
போலீசார் கூறுகையில், சம்பவம் தொடர்பாக பெண் எங்களை அணுகவில்லை. இருப்பினும் நாங்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கிரிமினல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தோம். குற்றவாளிகளில் ஒருவன், அந்த பெண் வழக்கமாக சென்று வரும் இடத்தை சேர்ந்தவன் என்றனர்.இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பாலியல் தொந்தரவு, தவறாக நடக்க முயற்சி, தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியின் பெயர் லெனோ என தெரியவந்துள்ளது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெயர் கெடாது:
சம்பவம் தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், இந்த சம்பவம் எதிர்பாராதது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். பாதுகாப்பில் நாங்கள் ஒரு போதும் சமரசம் செய்து கொண்டதில்லை. 70 சிசிடிவி கேமராக்கள், பொருத்தப்பட்டுள்ளன. புத்தாண்டில் மட்டும் ஒரு சம்பவத்தால் மட்டும் பெங்களூருவுக்கு கெட்ட பெயர் ஏற்படாது எனக்கூறினார்.
English Summary:
Bangalore: Bangalore 4 people were arrested in the woman's sexual harassment.