சென்னை - தமிழ்நாடு திரைப்படத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை, அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா தொடங்கி வைக்க வேண்டும் என திரைப்படத் துறையைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
'மக்கள் நெஞ்சங்களில் நீங்காது நிலைத்து நிற்கும் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு, தமிழ்நாடு திரைப்படத் துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் குறித்து, அ.தி.மு.க. கழகப் பொதுச்செயலாளர் சசிகலாவை சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நேற்று, திரைப்பட இயக்குநர்களான பி.பாரதிராஜா,கே. பாக்யராஜ்; தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி, இணைச் செயலாளர் லிங்குசாமி, செயற்குழு உறுப்பினர்களான மனோஜ் குமார், ரமேஷ் கண்ணா, சி. ரங்கநாதன்; தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் நாசர்; தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ். தாணு, துணைத் தலைவர் கதிரேசன்; தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கட்ரகட பிரஜாத்; சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன்;
தமிழ் நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம், முருகேசன்; சென்னை - செங்கல்பட்டு - திருவள்ளூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, சாகுல் அமீது, பிரசாத், வெங்கட்; தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் சிவா, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சந்திரன்; தென்னிந்திய இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார்; திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் செல்வின்ராஜ் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி டைமண்ட் பாபு உள்ளிட்ட அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் நேரில் சந்தித்தனர்.
அப்போது, தமிழ்நாடு திரைப்படத் துறையின் சார்பில், புரட்சித் தலைவரின் பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி, ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகத் தெரிவித்து, முதல் நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் சசிகலா கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு தமிழ்நாடு திரைப்படத் துறையைச் சேர்ந்த அனைத்து சங்கங்களின் நிர்வாகிகளும் அழைப்பு விடுத்தனர்.
English summary:
Chennai - Tamil Nadu film industry has been organized on behalf of MGR's birth centenary, should be the starting Shashikala ALADMK general secretary met union officials called for in the field of film.