புதுடில்லி : சென்னை, அகமதாபாத் மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களை ஸ்மார் சிட்டியாக மாற்றும் மத்திய அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முதல் கட்டமாக 20 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த பட்டியலை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி வெளியிட்டது. அந்த பட்டியலில், தமிழகத்தில் இருந்து சென்னையும், கோவையும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், சென்னை, அகமதாபாத் மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களை ஸ்மார் சிட்டியாக மாற்றும் மத்திய அரசின் முயற்சிக்கு உதவ ஜப்பான் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவிற்கான ஜப்பான் தூதர கென்சி ஹிரமட்சு, “நகரங்களை வளர்ச்சி செய்யும் இந்திய அரசின் திட்டத்தில் எங்களது அரசு ஆர்வமாக உள்ளது” என்றார். இதுவரை 15 நகரங்களின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒத்துழைப்பு அளிப்பதாக ஏற்கனவே அறிவித்து உள்ளன.
அதன் விவரம்:-
பிரிட்டன் - புனே, அமராவதி மற்றும் இந்தூர்
அமெரிக்கா - விசாகப்பட்டினம், அஜ்மிர் மற்றும் அலகாபாத் பிரான்ஸ் - சண்டிகர், புதுச்சேரி மற்றும் நாக்பூர்
ஜெர்மனி - புவனேஸ்வர், கோவை மற்று கொச்சி.
English summary:
New Delhi, Chennai, Ahmedabad and Varanasi Smart City will transform the cities of Japan has decided to provide support to the efforts of the central government.