சென்னை: ‛நேர்மையான, ஊழலற்ற அரசியல் கொள்கைக்காக போராடியவர் சோ' என்று பிரதமர் மோடி புகழாராம் சூட்டினார்.
துக்ளக் இதழின் 47 வது ஆண்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரை ஆற்றினார்.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
பன்முகத் தன்மை கொண்டவர்:
துக்ளக் ஆசிரியராக இருந்த சோவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு. எனக்கும் சோவுக்கும் இடையே தனிப்பட்ட ரீதியில் பல ஆண்டுகள் நட்பு உண்டு. என் வாழ்வில் நான் சந்தித்த பன்முகத் தன்மை கொண்ட சிலரில் சோவும் ஒருவர். பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர், நடிகர், கதாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகள் கொண்டவர். பல துறைகளில் சிறந்து விளங்கினாலும் துக்ளக் ஆசிரியர் என்ற பொறுப்பு அவருக்கான மணி மகுடமாகும்.
ஊழலற்ற அரசியலுக்காக போராடியவர்:
நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரையும் விமர்ச்சித்தவர். விமர்ச்சிக்க கடினமான விசயங்களையும் ஒரே வரி, கருத்து சித்திரம் மூலம் எளிதாக புரிய வைத்தவர். விமர்ச்சிக்கப்பட்டவர்கள் கூட விரும்பும் தன்மை கொண்டவர். சோவின் விமர்சனத்தை தவிர்த்துவிட்டு இந்திய அரசியல் வரலாற்றை எழுத முடியாது. நேர்மையான, ஊழலற்ற அரசியல் கொள்கைக்காகவே போராடியவர்.
சோவின் மறைவு துக்ளக் பத்திரிக்கைக்கு மிகப்பெரும் இழப்பு. சோ காட்டிய பாதையில் துக்ளக் ஆசிரியராக குருமூர்த்தி சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. குருமூர்த்திக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்.இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, தமிழில் பொங்கல் வாழ்த்து கூறி பிரதமர் மோடி தன் உரையை துவக்கினார்.
English summary:
Chennai: "honest, corruption-free politics Cho fought for principles that praised Modi.
Tughlaq magazine's 47th anniversary was held in Chennai today. Prime Minister Narendra Modi's speech delivered at the ceremony by video conferencing.