புதுடில்லி: ராணுவ வீரர்களின் குறைகளை தீர்க்க புகார் பெட்டி வைக்கப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
பிபின் ராவத், ராணுவ தளபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
பயங்கரவாதிகள் முயற்சி:
அப்போது அவர் கூறியதாவது:
காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. காஷ்மீரில் அமைதி நிலவ அனைவரின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. காஷ்மீரில் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்க வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதிகள் அங்கு கிடைக்க வேண்டும். காஷ்மீர் கலவரங்களை பாதுகாப்பு படையினர் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மாநில அமைதிக்கு பயங்கரவாதிகள் பிரச்னை ஏற்படுத்த முயற்சி செய்கின்னர்.
நேரடியாக பேசுங்கள்:
வீரர்களின் பிரச்னைகளை களைய புகார் பெட்டி உள்ளது. வீரர்கள் சமூக வலைதளங்களில் பேச வேண்டாம் எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள். சமூக வலைதளங்கள் இரண்டு பக்க கூர் உள்ள ஆயுதமாக திகழ்கிறது. இதனால் வீரர்கள் நேரடியாக தொடர்பு கொள்வதே சிறந்தது. வீரர்களின்பிரச்னைகளை தீர்க்க இரண்டு இடங்களில் குறைதீர்ப்பு பெட்டி வைக்கப்படும். வீரர்களின் குறைகள் அல்லது உயரதிகாரிகள் நடவடிக்கையில் திருப்தி அளிக்கவில்லை என்றால் நேரடியாக என்னை அணுகலாம். வீரர்கள் என்னை சந்திக்கலாம். நமது வீரர்கள் முக்கியமானவர்கள். வீரர்களின் கருத்துக்களையும், எண்ணங்களையும் அறிய விரும்புகிறேன். வீரர்களின் சமையலறை மேம்படுத்தப்படும்.
தீவிர கண்காணிப்பு:
இந்திய பாதுகாப்பு முன் உள்ள சவால்கள் பற்றி நன்கு அறிவேன். வீரர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும். நவீன ஆயுதங்கள் பயன்பாடும், உளவுத் தகவல்களும் அதிகரிக்கப்பட வேண்டும். எல்லையில் பயங்கரவாதிகளை ஒடுக்வகுதே சவாலாக உள்ளது. மறைமுக போர் பிரச்னை கவலையளிக்க கூடியதாக உள்ளது. தேவைப்பட்டால் சர்ஜிக்கல் தாக்குதல்கள் தொடரும். எல்லையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
English Summary:
NEW DELHI: Army chief of staff of the players will be placed in the box to redress grievances complaining Bipin Rawat said. Bipin Rawat, Commander of the Army met with reporters for the first time since taking office.