புதுடில்லி : பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது அவரை இயக்கும் அதிகார மையமாக சோனியா விளங்கினார் என்ற குற்றச்சாட்டை காங்., மறுத்துள்ளது.
முக்கியத்துவம்:
தேசிய ஆலோசனைக் குழுவின் 710 கோப்புகளை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது. இதில் காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, பிரதமராக இருந்த மன்மோகன் சிங், தேசிய ஆலோசனைக் குழுவின் தலைவராக இருந்த சோனியாவின் பரிந்துரைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளித்தார் என்பது தெரியவந்தது. இதன் மூலம் பிரதமரை மறைமுகமாக இயக்கும் அதிகார மையமாக சோனியா இருந்தார் எனக் கூறப்பட்டது. இக்குற்றச்சாட்டை காங்., மறுத்துள்ளது.
மறுப்பு:
இதுகுறித்து காங்., செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மத்திய அரசு 2006 முதல் 2010ம் ஆண்டு வரையிலான கோப்புகளை மட்டுமே வெளியிட்டுள்ளது. அக்காலகட்டத்தில் தேசிய ஆலோசனைக் குழுவில் சோனியா இடம்பெறவில்லை. ஆகவே பிரதமர் மன்மோகன் சிங்கை இயக்கும் சக்தியாக சோனியா இருந்தார் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறு.
தொலைநோக்கு சிந்தனை:
மேலும், தேசிய ஆலோசனைக்குழுவுக்கு சோனியா தலைவராக இருந்தபோதுதான் தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், மற்றும் வனப் பாதுகாப்பு சட்டம் ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன. குழு அளித்த ஆலோசனைகளை, தனது தொலை நோக்கு சிந்தனையில் ஆராய்ந்த மன்மோகன் சிங், அதன்மேல் நடவடிக்கை எடுத்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary:
New Delhi: Prime Minister Manmohan Singh, Sonia was the power center of the accusations directed at him Cong., Refused.