புதுச்சேரி : ‛‛புதிய தொழில்கள் தொடங்க, விரைவில் புதுச்சேரியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த உள்ளோம்,'' என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு, தூதரக சேவை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க ‛பிரவசி பாரதிய திவாஸ்' மாநாடு பெங்களூருவில் நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு நாராயணசாமி பேசியதாவது:வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் புதுச்சேரியில் முதலீடு செய்வதை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்கள் அரசு கடந்த ஆண்டு புதிய தொழிற் கொள்கையை அறிவித்துள்ளது. இதில் புதிதாக தொழில் தொடங்க முன் வருபவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள், குறைந்த மின்கட்டணம், தடையில்லா மின்சாரம் ஆகியவை குறித்து தெரிவித்துள்ளோம்.
தொழில் தொடங்க முன் வருபவர்கள் அனுமதி பெற ஒற்றைசாரள முறையை அறிமுகப்படுத்தி உள்ளோம். அரசின் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் விண்ணப்பித்து அனுமதி கிடைக்கும் வகையில் செய்துள்ளோம். தொழில் தொடங்க விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் அனுமதி அளிக்கப்படும். அனுமதி அளிக்காத துறைகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும். மாநில அரசு, 1,425 ஏக்கர் நிலத்தை அடையாளம் கண்டுள்ளது. இந்த நிலம் தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் மின்னணு, தகவல் தொழில்நுட்பம், அறிவுசார் அடிப்படையிலான தொழில் உள்ளிட்ட, 10 தொழில்களுக்கு முன்னுரிமை கொடுத்து உள்ளோம்.
பெரிய தொழில்களை தொடங்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு சலுகை மற்றும் ஊக்கம் அளிக்கப்படும். இதன் மூலம் அதிக அளவில் வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். மாநிலத்தின் வருவாயும் பெருகும். எனது தலைமையிலான உயர்மட்ட குழு இந்த சலுகைகள் குறித்து முடிவு செய்யும். விரைவில் புதுச்சேரியில் முதலீட்டாளர்கள் மாநாடும் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
English summary:
Pondicherry: '' to start new businesses, and soon we are going to hold a conference in Puducherry investors, '' said the Puducherry Chief Minister Narayanaswamy.