புதுடில்லி: தமிழகத்தைச் சேர்ந்த, 51 மீனவர்களை விடுவிக்கவும், மீன்பிடி படகுகளை திரும்ப ஒப்படைக்கவும், இலங்கை அரசு சம்மதித்துள்ளது.
இந்தியா - இலங்கை மீனவர்கள் இடையே, மீன் பிடிப்பதில், நீண்ட காலமாக பிரச்னை உள்ளது. இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாக, ஏராளமான தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும், இலங்கை அரசு பிடித்து வைத்துள்ளது.
சம்மதம்:
இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில், இந்தியா - இலங்கை நாடுகள் இடையே, நேற்று, உயர்மட்டக் குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஏற்பட்ட சுமுக முடிவின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த, 51 மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க, இலங்கை அரசு சம்மதித்தது. அதேபோல், இந்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, மூன்று இலங்கை மீனவர்களை விடுவிக்க, இந்திய அரசு சம்மதித்தது.
சுமுக முடிவுகள்:
வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், விகாஸ் ஸ்வரூப், டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: மீனவர் பிரச்னை தொடர்பாக, அமைச்சர்கள் அளவிலான, உயர்மட்டக் குழு கூட்டம், கொழும்பு நகரில் நடந்தது. இக்கூட்டத்தில் சுமுக முடிவுகள் எடுக்கப்பட்டன. இரு தரப்பும், மீனவர்களை பரஸ்பரம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த, சர்வதேச செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற சம்மதித்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை அரசு, தன் பிடியில் உள்ள தமிழக மீனவர்களை அவ்வப்போது விடுவித்து வந்தாலும், அவர்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்க முடியாதென, பிடிவாதமாக இருந்தது. தற்போது நடந்த பேச்சில், மீனவர்களின் விலை உயர்ந்த மீன்பிடி படகுகளை ஒப்படைக்க சம்மதித்துள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நேற்று நடந்த உயர் மட்டக் கூட்டத்தில்,மத்திய அரசு சார்பில், விவசாயத்துறை அமைச்சர், ராதாமோகன் சிங்கும், இலங்கை சார்பில், அந்த நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர், மஹிந்தா அமரவீராவும் பங்கேற்றனர்.
English summary:
NEW DELHI: Tamil Nadu, fishermen release 51, and the return of the fishing boats, the Sri Lankan Government agreed. India - Sri Lanka between fishermen, fish, is a long-standing problem. Sri Lankan waters for fishing, many fishermen, fishing boats, and with the Government of Sri Lanka.