புதுடில்லி : ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கும் வங்கிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், திட்டமிடப்படாமல், அரசு கொண்டு வந்துள்ள இந்த பயனற்ற திட்டத்தால் ஆரம்பத்திலேயே மத்திய அரசு மக்களின் அதிருப்தியையும், வெறுப்பையும் பெற்றுள்ளது. கிரெடிட் கார்டு அல்லத டெபிட் கார்டுகளை பயன்படுத்த மக்களை பழக்கயிருக்க வேண்டும். பணமில்லா பரிவர்த்தனையையும் பழக்கி இருக்க வேண்டும்.
அரசுக்கும் வங்கிகளுக்கும் இடையே சரியான அளவில் ஒருங்கிணைப்பு இல்லாததே இதற்கு காரணம். இவர்களின் கடுமையான நடவடிக்கைகளை ஏற்ற வேண்டும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்களை வற்புறுத்தும் வகையிலேயே இவர்களின் கொள்கைகள் உள்ளது. கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் போடுபவர்களுக்கு 0.75 சதவீதம் சலுகை அளிப்பது ஏன்? வங்கிகள், பெட்ரோல் பங்குகளிடம் இருந்து எம்டிஆர் (merchant discount rate) ஒரு சதவீதம் கட்டணம் வசூலிக்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
English summary:
NEW DELHI: The bill was withdrawn in the case of a lack of coordination between the central government and the banks, Congress president Sonia Gandhi's son-in is accusing Robert Vadra.