திருச்சி: ஜல்லிக்கட்டுக்கு போராடும் இளைஞர்கள், விவசாயத்திற்கும் போராட வேண்டும் என திருச்சியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஊர்காவல் படையை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர் பேசினார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மதுரையில் போலீஸ் ஒருவர் ஆதரவு தெரிவித்தார். சென்னையில் நேற்று ஆயுதப்படை காவலர் மதியழகன், போக்குவரத்து தலைமை காவலர் விஜயகுமார் ஆகியோர் மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். சீருடையில் இருவரும் 'மைக்' பிடித்து, உணர்ச்சி பெருக்குடன் பேசியதால், அவர்களை இளைஞர்கள் கட்டித் தழுவி நன்றி தெரிவித்தனர்.
விவசாயத்திற்கும் போராடுங்கள்:
இந்நிலையில், திருச்சி எம்.ஜி.ஆர்., சிலை அருகே நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில், பாதுகாப்புக்கு வந்த ஊர்க்காவல் படையை சேர்ந்த பெல்சன் என்பவர் பேசியதாவது: நானும் கிராமத்தை சேர்ந்தவன் தான். ஜல்லிக்கட்டு எனக்கு பிடிக்கும். ஜல்லிக்கட்டு நடக்காதது வேதனையளிக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு போலீஸ் எதிரி கிடையாது. அதனால்,போலீசாரை அனைவரும் மதித்து நடக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு போலீசார் உங்களுக்கு உதவி செய்கிறார்கள். போலீசார் உங்கள் நண்பர். ஜல்லிக்கட்டுக்காக போராடும் நீங்கள் விவசாயத்துக்காகவும் போராட வேண்டும் என்றார்.
யாரு அந்த பீட்டா?
ஜல்லிக்கட்டை குழந்தை பருவம் முதல்
பார்த்து வருகிறோம். நமது தாய் தந்தை சொல்லி கொடுத்தது. ஜல்லிக்கட்டை பற்றி பீட்டாவிற்கு தெரியாது. அவர்கள் யார் ஜல்லிக்கட்டை தடை செய்ய? இது உணர்வுப்பூர்வமான போராட்டம். இந்த போராட்டத்தை பார்த்து கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை இந்த போராட்டத்தில் கலந்து கொண்டேன். உங்கள் உணர்வுப்பூர்வமான போராட்டத்திற்கு எனது வாழ்த்துக்கள். இளைஞர்கள் அமைதியாக போராடுவது மகிழ்ச்சியை தருகிறது எனக்கூறினார்.
அவரது பேச்சை கேட்டு ரசித்தவர்கள் கரகோஷம் எழுப்பி மகிழ்வை வெளிப்படுத்தியதுடன் முத்தம் கொடுத்தனர்
English summary:
Trichy: Jallikattu fighting youth, who participated in the struggle for the peasants to fight the Civil Defence Force in Trichy police official said.