பெரம்பலூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் இறுதியாக காவல்துறையினரை கட்டித்தழுவி தங்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டனர்.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன் கடந்த 7 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர்களை இன்று காலை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர். இருப்பினும் மாணவர்களே காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களுக்கு இத்தனை நாட்களாக காவல்துறையினர் ஒத்துழைப்பு அளித்ததால் அவர்களை கட்டித்தழுவி, நன்றி கூறி மாணவர்கள் கலைந்து சென்றனர்.
English summary:
Jallikattu the students who are engaged in the demonstration in support of the police finally called off their strike and hugs.