சென்னை - ஜல்லிக்கட்டு பிரச்னையை முன்வைத்து மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், அ.தி.மு.க. சார்பில் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த, எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டு, வேறொரு நாளில் நடத்தப்படும் என தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
அதிமுக நிறுவனத் தலைவர், எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் அனைத்துப் பகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டு, அவை சிறப்பாக நடைபெற்று வருவதாக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தம் கலாச்சார உரிமையும், பெருமையும் ஆன ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி தமிழகமெங்கும் மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் தன்னெழுச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தற்போதைய சூழ்நிலையில், அவர்களுக்கு ஆதரவாக கழகப் பொதுச்செயலாளர் சசிகலா அறிக்கை வெளியிட்டதோடு, இதுசம்பந்தமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழித்தடத்தில் நடைபெற்று வரும் தமிழக அரசின் முதலமைச்சரும், கழக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்ட குழுவும் புதுடெல்லிக்குச் சென்று, இந்தியக் குடியரசுத் தலைவரையும், பாரதப் பிரதமரையும் நேரில் சந்தித்து, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க ஒரு சட்டத்திருத்தத்தை விரைந்து முன்மொழிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுப் பிரச்னையை முன்வைத்து மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கழகத்தின் சார்பில் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுக்கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டு, இக்கூட்டங்கள் பிரிதொரு நாளில் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்வதாகவும், தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English summary:
Chennai - jallikattu students presented a problem, because it is the young people staged a series of others, Digg Held yesterday, announced on behalf of MGR's 100th birthday party postponed meetings, to be held at a later date, according to the Supreme Council.