இஸ்லாமாபாத் : நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பாயும் அணுஆயுத ஏவுகணையை, பாக்., வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்தியப் பெருங்கடலில் நடத்தப்பட்ட இந்த சோதனை எப்பகுதியில் நடத்தப்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இலக்கை தாக்கியது:
இதுகுறித்து பாக்., ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நீர்மூழ்கி கப்பலிலிருந்து செலுத்தக்கூடிய பாக்.,ன் முதல் ஏவுகணையான ‛பாபர்-3' வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. வெடி பொருளை சுமந்து பாயும் இந்த ஏவுகணை சுமார் 450 கி.மீ., தொலைவிலுள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது. நிர்ணயித்த இலக்கை ‛பாபர்-3' கடலுக்கடியிலிருந்து சரியாக தாக்கி அழித்தது. இது பாக்., ராணுவத்தின் மைல்கல்லாக அமைந்தது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்த்து:
ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதற்காக, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் முப்படைத் தளபதிகள் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
English Summary:
ISLAMABAD: flowing from the nuclear missile submarine, Bach., Successfully tested. The test was carried out anywhere in the Indian Ocean that were never disclosed.