புதுடெல்லி - இந்திய ராணுவ வீரர் தேஜ் பதூர் யாதவ் எல்லையில் ராணுவ வீரர்களுக்கு தரமற்ற உணவுப்பொருட்கள் வழங்கப்படுவது தொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். வீடியோ வெளியீடு இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையின் 29-வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த தேஜ் பதூர் யாதவ் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். யாதவ் பேசுகையில் எல்லையில் பணியாற்றும் வீரர்கள் வெறும் வயிற்றுடன் தூங்க செல்கிறோம் என்று கூறியிருந்தார். குற்றச்சாட்டு விளக்கமாக பேசிஉள்ள யாதவ், உயர் அதிகாரிகள் சட்டவிரோதமாக ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களை விற்பனை செய்கின்றனர் என்ற பரபரப்பு குற்றச்சாட்டையும் முன்வைத்து உள்ளார். “காலை உணவாக ஒரு பரோட்டா மற்றும் டீ வழங்கப்படுகிறது. அதுவும் ஒரு ஊருகாய் அல்லது காய்கள் வழங்கப்படுவது கிடையாது.
நாங்கள் 11 மணி நேரம் எல்லையில் பணியாற்றுகிறோம். எல்லையில் பணிநேரத்தின் போது நாங்கள் பாதுகாப்பு பணிக்கு நின்றுக் கொண்டே உள்ளோம். மதியம் உணவாக ரொட்டியுடன் பருப்பு வழங்கப்படுகிறது. பருப்பில் வெறும் மஞ்சள் தூள் மற்றும் உப்பு மட்டுமே உள்ளது. இதுவே எங்களுக்கு கிடைக்கும் உணவின் தரமாகும். ஒரு ராணுவ வீரர் எப்படி இதனை சாப்பிட்டு பணியாற்ற முடியும்? என்று யாதவ் குற்றம் சாட்டியிருந்தார். பிரதமருக்கு கோரிக்கை மேலும் பேசுகையில் “இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்கவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுக்கின்றேன். எங்களுடைய நிலையை யாரும் வெளிக்காட்டவில்லை,” என்று கூறிஉள்ளார். எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் கூறிய யாதவ், இவ்விவகாரம் தொடர்பாக சரியான நடவடிக்கையானது மேற்கொள்ளப்படவேண்டும்,
மக்கள் முன்னெடுத்து செல்லவேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். வீரர்கள் மகிழ்ச்சி இந்தியா டுடே பத்திரிக்கைக்கு பேட்டியளித்து பேசிஉள்ள யாதவ் என்னுடைய வீடியோ பதிவினால் பிற ராணுவ வீரர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று கூறிஉள்ளார். மேலும் உணவின் தரம் குறித்து பதிவிடப்பட்ட வீடியோவை நீக்கம் செய்ய உயர் அதிகாரிகள் முயற்சி செய்கிறார்கள் என்றும் கூறிஉள்ளார். 1996-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த யாதவ் “என்னுடைய பணியை இழப்பது குறித்து பயப்படவில்லை. எது உண்மையே அதனைத்தான் வெளிக்கொண்டு வந்து உள்ளேன். என்னால் ராணுவ வீரர்கள் பயன் அடைந்தால், பின்னர் நான் எதிர்க்கொள்ள தயாராக உள்ளேன். இது தொடர்பாக விசாரணை நடத்தினால் அதிகமான உண்மைகள் வெளியே வரும்,” என்றும் கூறிஉள்ளார். பணியிட மாற்றம் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதை தொடர்ந்து எல்லையில் அவருடைய பணியானது மாற்றப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
தரமற்ற உணவுப்பொருட்கள் தொடர்பாக ஏற்கனவே உயர்மட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டும் எந்தஒரு நகர்வும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளார் யாதவ். அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு இந்த நிலையில் இது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார். எல்லை பாதுகாப்பு படை ஜவான் மூலம் பகிரபட்ட வீடியோ வருந்தத்தக்கது. இது குறித்து உள்துறை செயலாளரிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.
English Summary:
Union Home Minister Rajnath Singh has ordered the case to trial. Video output in India-Pakistan border, the Border Security Force Battalion of the 29th Division has published a video of the Tej Bathur Yadav. Yadav peciulla charge interpretation, the high officials of illegally selling food provided to military veterans has presented a sensational accusations. "A Parotta breakfast and tea are provided. It has not been paid a pickle or pods.