புதுடில்லி: பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய ‛பீம் ஆப்' 6 நாட்களில் 50 லட்சம் பதிவிறக்கத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது.
மக்களிடையே மின்னணு பரிவர்த்தனையை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, கடந்த 30 ஆம் தேதி மத்திய அரசு நிறுவனமான என்.பி.சி.ஐ., வடிவமைத்துள்ள ‛பீம் ஆப்' பை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தினார்.
பிளே ஸ்டோரில் முதலிடம்:
அறிமுகப்படுத்தப்பட்ட 6 நாட்களுக்குள்ளாகவே 50 லட்சம் பதிவிறக்கத்தை தாண்டியது. இந்தியாவில், பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்படும் ஆப் பட்டியலில் பீம் ஆப் முதலிடம் பெற்றுள்ளது.
50 லட்சத்தை தாண்டியது:
இதுகுறித்து,தெற்கு கிழக்கு ஆசிய மற்றும் இந்தியாவிற்கான கூகுள் நிறுவன துணை தலைவர் ராஜன் ஆனந்தன் கூறுகையில், " இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை அபார வளர்ச்சி அடைந்து வருகிறது. மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பீம் ஆப் 50 லட்சம் பதிவிறக்கத்தை தாண்டியுள்ளது" என்றார்.
விரைவில் பிற மொழிகளில்:
"ஐ.ஓ.எஸ்.,க்கான ஆப் இன்னும் 10 நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும்.மேலும், தற்போதுள்ள, இந்தி, ஆங்கிலம் மொழிகள் தவிர்த்து பிற மாநில மொழிகள் விரைவில் சேர்க்கப்படும்" என நிதி ஆயோக் தலைமை செயல் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
English Summary:
NEW DELHI: Prime Minister introduced the 'beam of' 6 days beyond the record of 50 million downloads. Among the electronic transaction has taken various steps to increase the federal government. For its part, the federal government agency on the 30th NPCI, designed 'beam of the' bag introduced by Prime Minister Narendra Modi.