கோல்கட்டா: திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ., கட்சிகளுக்கிடையே நடந்த மோதல்களுக்கு பின் இரு கட்சிகளும், மாநில கவர்னர் கேசரிநாத் திரிபாதியிடம் தனித் தனியாக முறையீடு செய்துள்ளன.
கைது செய்ய வேண்டும்:
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் பர்தா சட்டர்ஜி மாநில கவர்னரிடம் முறையீடு செய்ததாவது, ரோஸ் பள்ளதாக்கு ஊழலில் தொடர்புடைய மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவை கைது செய்ய வேண்டும். மாநில அரசிடம் கலந்தாலோசிக்காமலே பா.ஜ., அலுவலகங்களில் மத்திய பாதுகாப்பு படை போலீசாரை நிறுத்தியிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். மத்திய அரசு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் இ
ழைந்து விட்டது. இவ்வாறு அவர் முறையீடு செய்துள்ளார்.
ஜனாதிபதி ஆட்சி:
பா.ஜ., அலுவலகங்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பா.ஜ., மாநில தலைவர் திலீப் கோஷ் கவர்னரிடம் முறையிட்டுள்ளார். இது போன்ற வன்முறை சம்பவங்கள் சற்றும் எதிர்பாராத வகையில் நடந்துள்ளன. நாங்கள் ஆட்சி கலைப்பை விரும்பவில்லை. ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதாக கவர்னரிடம் அவர் முறையிட்டுள்ளனர்.
English Summary:
KOLKATA : Trinamool Congress and the BJP, the two parties after the parties to the conflict, separately appealed to the state governor kesri nath Tripathi.