சென்னை: டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் 11 உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
11 உறுப்பினர்கள்:
டி.என்.பி.எஸ்.சி., எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் புதிய உறுப்பினர்களாக வழக்கறிஞர்கள்கள் பிரதாப்குமார், சுப்பையா, முத்துராஜ், சேதுராமன், பாலுசாமி,மாடசாமி, முன்னாள் மாவட்ட நீதிபதி வி.ராமமூர்த்தி, இன்ஜினியரிங் முதுகலை பட்டதாரி பி.கிருஷ்ணகுமார், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முன்னாள் தலைமை இன்ஜினியர் சுப்பிரமணியன், முன்னாள் அரசு அதிகாரி புண்ணியமூர்த்தி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜாராம் ஆகிய, 11 பேர் கடந்த ஆண்டு ஜன.,31ல் நியமிக்கப்பட்டனர்.இதை எதிர்த்து தி.மு.க. - எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, வழக்கறிஞர் சமூக நீதிப்பேரவையின் தலைவர் பாலு உள்பட பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‛11 உறுப்பினர்கள் நியமனம் சட்டப்படி நடைபெறவில்லை.அவர்களின் நியமனம் செல்லாது. அந்த நியமனங்கள் ரத்து செய்யப்படுகின்றன' என, உத்தரவு பிறப்பித்தது. மேலும், 11 உறுப்பினர்களின் நியமனம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேல்முறையீடு:
இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா தாக்கல் செய்த மேல்முறையீட்டுமனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: புதிய உறுப்பினர்களின் நியமனங்கள் அனைத்தும் அரசியல் சட்டத்தின் உரிய பிரிவின் அடிப்படையில் கவர்னரால் செய்யப்பட்டவை. தமிழக அரசின் நியமனத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க மனுதாரர்களுக்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பொது நிர்வாகத்தில் தேவையான அனுபவம் உள்ளது. இந்த நியமனம் தொடர்பாக குறிப்பிட்ட நடைமுறைகள் எவையும் வரையறுக்கப் படவில்லை. இந்த நியமனங்களுக்கான நடைமுறைகளுக்கு தேவையான கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. தகுதிக்குறைவின் அடிப்படையில் இவர்களின் நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்யவில்லை. ஆனால் இந்த நியமனம் தொடர்பான நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்ட தேதியில் அவர்கள் எந்த அரசியல் கட்சியிலும், எந்த பதவியையும் வகிக்காதவர்கள்.அரசியல் சட்டப்பிரிவு 316ன் கீழ், மாநிலத்தின் கீழ் வரும் பொதுப்பணியாளர்கள் ஆணையத்தில் நியமனங்கள் செய்ய மாநில அரசுக்கு உள்ள உரிமையில் அந்த உறுப்பினர்கள் மீது ஏதாவது
புகார் இருந்தால் ஒழிய நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
ரத்து செய்ய மறுப்பு:
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 11 உறுப்பினர்களின் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உச்சநீதிமன்றம்ம றுத்து விட்டது. தகுதி வெளிப்படைதன்மை உள்ளவர்களை அப்பொறுப்பில் நியமிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
English summary:
Chennai: TNPSC, the Tamil Nadu government has revoked the appointment of 11 members of staff Examination, Madras High Court, the Supreme Court has refused to cancel the order.