சென்னை: தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பருவ மழை பொய்த்தது, காவிரி நதி நீர் போதிய அளவு திறக்கப்படாதது உள்ளிட்ட பல காரணங்களால் தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது. மேலும், மேட்டூர், வைகை, சாத்தனூர் உள்பட அணைகளில் நீர்மட்டம் குறைந்தும், சிறிய குளங்கள், ஏரிகள் வறண்டும் காணப்படுகின்றன. நீர்த் தேக்கங்களில் தண்ணீர் இன்னும் ஒருசில வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளதால், கோடைகாலத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெற்பயிர்கள் போதிய தண்ணீர் இல்லாததால் கருகிவிட்டன. வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகள் பலர் அதிர்ச்சியால் மரணமடைந்து வருகின்றனர்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்களும், அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், வறட்சி குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர், ஆட்சியர்கள் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட குழு கடந்த சில நாள்களாக ஆய்வு செய்தனர்.
காய்ந்த பயிர்கள், வறண்டு கிடக்கும் நிலங்கள்- நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொது மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.
வறட்சி நிலை, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட சேகரித்த விவரங்கள் குறித்து அறிக்கையாகத் தயாரிக்கும் பணி மாவட்ட ஆட்சியர்கள், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், அறிக்கைகள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் திங்கள்கிழமை அளிக்கப்படும் என்றும் இதன்படி தேவையான உதவிகள்- நிவாரணங்கள் குறித்த அறிவிப்புகள் அறிவிப்புகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு விவரங்கள்:
- தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்படும்.
- விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுமையாக ரத்து செய்யப்படும்.
- இதற்கான அன்னவாரி சான்றிதழ் விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
- பயிர்க்கடன்களை மத்தியகால கடன்கனாக மாற்றி அமைக்க வழிவகை செய்யப்படும்.
- வறட்சி நிவாரணக் கோரிக்கை மனு மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பப்படும்.
- 33 சதவீதத்திற்கு அதிகமாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்படும்.
- நெல்பயிர் ஏக்கருக்கு ரூ.5,465, மானாவாரி பயிருக்கு ஏக்கருக்கு ரூ.3,000 வழங்கப்படும்.
- வறட்சியில் இருந்து மக்களை காக்க மத்திய அரசிடம் நிதியுதவி கோரப்படும்.
- கிராமப்புற வேலை உறுதித்திட்ட நாள்கள் 150 ஆக உயர்த்தப்படும்.
- தற்கொலை செய்துகொண்ட 17 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
English Summary:
Chennai: Tamil Nadu Chief Minister Panneerselvam said that the proclamation of the State of drought. Monsoon, Cauvery river water to drought-like situation in the state due to various reasons, including inadequate unopened. Also, Mettur, Vaigai, including Sathanur low tides in dams, small ponds, lakes are dry. The water in the reservoirs is sufficient if only for a few weeks in the summer, there is a risk of a severe shortage of drinking water