சென்னை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து இன்றும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து வருகிறது. போராட்டம் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், போராட்டத்தில் கலந்து கொள்ள வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அணிதிரளும் தமிழகம் :
சமூக வலைதளத்தால் ஒன்றிணைந்த இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் என துவங்கப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டம் தற்போது ஒட்டுமொத்த தமிழர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது. மதுரை அலங்காநல்லூரில் தொடர்ந்து 4வது நாளாகவும், சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் 3வது நாளாகவும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்திற்கு நேற்று நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இன்று வணிகர்கள், லாரி உரிமையாளர் சங்கத்தினர், ஆசிரியர் சங்கத்தினர் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சங்கங்கள் அறிவிப்பு :
மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக நாளை (ஜனவரி 20) தமிழகம் முழுவதும் 50 லட்சம் கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை லாரிகள் மற்றும் மணல் லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஆசிரியர் சங்கத்தினரும், ஆசிரியர்கள் அனைவரும் நாளை கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
பெண்களின் ஆதரவு :
மாணவர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி வருவதால் அவர்களுக்கு ஆதரவாக கிராம மக்கள் பலரும் போராட்ட களத்தில் இறங்கி உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் பெண்களும், குழந்தைகள் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர்.இரவுகளில் வீடுகளுக்கு சென்றாலும், அதிகாலையிலேயே போராட்ட களத்திற்கு வந்து, மீண்டும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். பல பெண்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.திருவள்ளூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். டில்லிக்கு சென்றுள்ள முதல்வர் பன்னீர்செல்வம், அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி உள்ளார். டில்லியில் உள்ள தமிழக மாணவர்கள் தமிழ்நாடு இல்லம் முன், ஜல்லிக்கட்டு நடத்த கோரி போராட்டம் நடத்தி உள்ளனர்.
English Summary:
Chennai: Tamil Nadu continued today in various parts of the battle is going jallikattu. We will fight to leave for college, is increasing the number of students who take part in the struggle.