சென்னை: நடிகர் விஜய் சென்னை மெரினாவில் நடக்கும் போராட்டத்திற்குஆதரவு தெரிவித்து நேற்று இரவு நேரில் வந்தார். அவர் தனது முகத்தில் கர்ச்சீப் கட்டி மறைத்து கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் நடிகர் என்று இல்லாமல் ஒரு தமிழனாய் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தில் இளைஞர்களிடையே அமர்ந்து தனது ஆதரவை தெரிவித்தார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் 6-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த அறவழி போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
சென்னை மெரினாவில் 5-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. மெரினாவில் நேற்று ஒரே நாளில் 10 லட்சம் பேர் திரண்டதால் கடற்கரை முழுவதும் மனித தலைகளாக காட்சியளித்தது. இவர்கள் பெரும் திரளாக கூடி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில், அதிக அளவில் பெண்களும், குழந்தைகளும் கலந்து கொண்டனர். இந்நிலையில்
மாணவர்கள் காலை 8 மணியில் இருந்தே, சாரை சாரையாக மெரினா கடற்கரையை நோக்கி சைக்கிள், இருசக்கர வாகனம், கார், வேன், பேருந்துகளில் லட்சக்கணக்கில் படையெடுத்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்திக்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஒரே இடத்தில் அனைவரும் ஒன்று கூடியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். மணல் பரப்பே தெரியாத அளவுக்கு காமராஜர் சாலை மற்றும் மெரினா கடற்கரை மக்கள் தலைகளாக காட்சியளித்தன.
மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் காரணமாக மெரினாவிற்கு செல்லும் சாலை முழுவதும் கடந்த 4 நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களே போக்குவரத்தை சரி செய்து வாகனங்கள் தடையில்லாமல் செல்ல ஏற்பாடு செய்து வருகின்றனர். எந்த வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் மெரினாவில் போராட்டம் நடைபெற்று வருவதால் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
English summary:
CHENNAI: Actor Vijay will take place at Marina struggle support came straight night yesterday. He was attending a meeting with his face hidden kerchief building. Without casting a tamilan he has participated in the struggle. The meeting expressed its support for the seated youth. Jallikattu 6-consecutive day in support of the struggle has been taking place throughout the state. The moral struggle of students, youth and attended various sides.