எடா - உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளிப்பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 24-க்கும் அதிகமான சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பேருந்து மீது மோதல்:
உத்தர பிரதேச மாநிலம் எடா மாவட்டத்தில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில், 60 பள்ளிக்குழந்தைகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே தறிகெட்டு ஓடிய டிரக் பேருந்து மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
24 பேர் பலி:
இந்த கோர விபத்தில் பள்ளி குழைந்தைகள் 24 பேர் பலியாகினர். 25 பேர் குழைந்தைகள் படுகாயம் அடைந்தனர். பேருந்தில் பயணம் செய்த பள்ளிக்குழந்தைகள் அனைவரும் 10 முதல் 7 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். மேலும், பல குழந்தைகள் படுகாயமடைந்ததால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர விசாரணை:
இந்த கோர சம்பவம் குறித்து எடா நகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த மாவட்டத்தில் கடும் குளிர் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. ஆனால், பள்ளி நிர்வாகம் அந்த உத்தரவை மீறி பள்ளியை திறந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் இரங்கல்:
இதற்கிடையே, இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, “ உத்தர பிரதேச மாநிலம் எடா மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்ததும் மிக துயரம் அடைந்தேன். குழந்தைகளை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயம் அடைந்த குழந்தைகள் விரைவில் குணம் அடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
Etah - truck collided on the school bus in the state of Uttar Pradesh, more than 24 children lost their lives miserable. Modi condoles the claim incident.