சென்னை - ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி இன்று ஒப்புதல் அளிப்பார் என்றும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடைபெறும் என்றும் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் வாடிவாசல் விரைவில் திறக்கப்படும். ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிகுதித்து ஓடி வரும். போட்டியை நானே தொடங்கிவைப்பேன் என்றும் கூறிய முதல்வர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமருக்கு கடிதம்:
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெற அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்று பிரதமரை நேரில் சந்தித்து ஜல்லிக்கட்டு நடைபெற அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார். தமிழக மக்களின் உணர்வுகளை மதிப்பதாக அப்போது தெரிவித்த பிரதமர், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு மேற்கொள்ளும் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என உறுதி அளித்தார்.
டெல்லியில் தங்கி முதல்வர் நடவடிக்கை:
இதனைத்தொடர்ந்து, உடனடியாக ஜல்லிக்கட்டு நடைபெற அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக முதல்வர் டெல்லியிலேயே தங்கி நடவடிக்கை மேற்கொண்டார். அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக நேற்று காலை முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததார். இந்நிலையில், சென்னை திரும்பிய முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் ஜல்லிகட்டு உறுதியாக நடைபெறும் என்றும் தமிழக அரசின் அவசர சட்ட வரைவுக்கு ஜனாதிபதி இன்று ஒப்புதல் அளிக்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
வாடிவாசல் திறக்கப்படும்:
மேலும் வாடிவாசல் விரைவில்திறக்கப்படும் என்றும், போட்டியை நானே தொடங்கிவைப்பேன் என்றும் கூறிய முதல்வர் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது.,ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்தேன். பின்னர் டெல்லியிலேயே தங்கி, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினேன். இது தொடர்பாக, தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவரவுள்ளது. இந்த வரைவு அவசரச் சட்டத்திற்கு ஜனாதிபதியின் ஒப்புதல் நாளை (இன்று) கிடைத்தவுடன் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும். ஜனாதிபதி தற்போது அலுவல் காரணமாக வெளியூரில் உள்ளார். அவர் திரும்பியதும் நாளை (இன்று) ஒப்புதல் கிடைக்கும். அதன் பிறகு தமிழக ஆளுநர் மூலமாக அவசரச்சட்டம் பிறப்பிக்கப்படும்
காளைகள் துள்ளிவரும்:
எனவே மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரும். அவர்கள் எதிர்பார்த்தபடி, வாடிவாசல் விரைவில் திறக்கும். ஜல்லிக்கட்டு காளைகள் துள்ளிகுதித்து ஓடிவரும். இனிமேல் தடை ஏதும் வராது. வந்தாலும், அதை நீக்குவதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு முதல்வர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ராஜ்நாத்துடன் சந்திப்பு:
முன்னதாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை தலைமையில் அ.தி.மு.க எம்.பி.க்கள் அனைவரும் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கை சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்கள். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தம்பிதுரை தமிழக முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரித்தார்.
தம்பிதுரை குற்றச்சாட்டு:
ஜல்லிக்கட்டு தடைக்கு தி.மு.கவும், காங்கிரசும் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். இந்த விசயத்தில் தி.மு.க போராட்டம் நடத்துவது மக்களை ஏமாற்றும் வேலை, மக்களை திசை திருப்பும் செயல் என்றும் குற்றம்சாட்டினார். இந்த பிரச்சனைக்கு தீர்வு என்னவென்றால் தடைசெய்யபப்ட்ட பட்டியலில் இருந்து காளையை நீக்குவது தான் என்றும் அவர் கூறினார். ஜல்லிகக்ட்டுக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளையும் அப்போது அவர் விவரித்தார். தன்னை சந்தித்த அ.தி.மு.க. எம்.பிக்களிடம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதுதொடர்பாக உறுது அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary:
Chennai - jallikattu touch with the State Government today approved emergency legislation would give the President and the Chief Minister of Tamil Nadu Jallikattu o pannerselvam wealth held firm said emphatically.