
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொங்கல் சிறப்பு பேருந்துக்கான கணினி முன்பதிவு மையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று காலை திறந்து வைத்தார். மொத்தம் 29 கணினி மையம் திறந்து வைக்கப்பட்டது. பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோருக்கும் தனித்தனி கவுன்டர்கள் திறக்கப்பட்டன. அப்போது, அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
இத்தகவலை செய்தியாளர்களிடம் கூறிக் கொண்டிருக்கும் போது, பெங்களூருவை சேர்ந்த பெண் பயணி ஒருவர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில், காவலர்கள் சிலர் தம்மை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெண் பயணி, தாம் ஒரு ஆராய்ச்சி மாணவி என்றும், தம்மை துன்புறுத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பெண் பயணியின் புகார் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார்.
English summary:
Chennai koyampet computer for the Pongal special bus M.R.vijayaBaskar booking center was inaugurated by Minister of Transport.