ஜல்லிக்கட்டு தொடர்பான கோரிக்கையை வலியுறுத்துவதற்காக பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கிடைக்காததையடுத்து அவரது வீட்டு முன்பு அமர்ந்து பாமக நாடாளுமன்ற உறுப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்குவதற்காக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காக பிரதமர் மோடியை சந்திப்பதற்காக அன்புமணி ராமதாஸ் அனுமதி கேட்டிருந்தார்.
ஆனால் பிரதமரை சந்திப்பதற்கு அனுமதி கிடைக்காததையடுத்து பிரதமர் வீட்டு முன்பு அமர்ந்து அன்புமணி ராமதாஸ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்து அவரை பிரதமர் இல்ல பாதுகாவலர்கள் அகற்றினர்.
இதையடுத்துச் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலையை ஏற்படுத்த வேண்டாம் என மத்திய அரசை எச்சரித்தார். இதனிடையே, மாலையில் அன்புமணி ராமதாஸ் காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
English summary:
No response jallikattu request to meet Modi to press the mouthpiece MP sitting in front of his home and a sit-in protest.